NEWS PRESENTERS PROFILE
றஜித்தா சாம் மெய்வெளியின் இயக்குனர்களில் ஒருவராகப் பணியாற்றி வருவதோடு மெய்வெளியின் செய்திப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். 25 வருடங்களுக்கு மேற்பட்ட நாடக அரங்கியல் அனுவங்களையும் 15 வருடங்களுக்கு மேற்பட்ட ஊடக அனுபவங்களையும் கொண்டுள்ள றஜித்தா மெய்வெளியின் நிகழ்ச்சித் தயாரிப்புப் பிரிவின் முதன்மை நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும் செயலாற்றி வருகிறார். லண்டனில் வசித்துவரும் இவர் லண்டனில் இயங்கிய பல முன்னணித் தொலைக்காட்சிகளில் பொறுப்பவாய்ந்த பணிகளில் கடமையாற்றி தன் ஆளுமையால் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்த பேரனுபவம் கொண்டவர். கலை இலக்கிய நாடக ஊடக முயங்சிகளில் தொடர்ந்தும் இயங்கி வருபவர்.
சுகந்தினி சிவகுமார் 2020 முதல் மெய்வெளியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருவதோடு லண்டனில் பயிற்சிபெற்ற தமிழ் ஆசிரியராகவும் தனது பணியினை ஆற்றி வருபவர். பல கலை இலக்கிய முயற்சிகளோடு தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் சுகந்தினி, பிரித்தானிய கல்வி மேம்பாட்டுப் பேரவையோடு இணைந்து செயலாற்றி வருவதோடு பல சமூகத் தொண்டு நிறுவனங்களிலும் ஈடுபாட்டோடு செயலாற்றி வருபவர்.
சுகன்யா பிறேம் 2021 முதல் மெய்வெளித் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். இலங்கையில் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் பணியாற்றிய சுகன்யா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். தொடர்ந்தும் பல கலை ஊடக முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் சுகன்யா பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் தயாரித்து வழங்கிய அனுபவம் கொண்டவராவார்.
அமனிற்றா இம்மானுவேல் 2021 முதல் மெய்வெளி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். அமனிற்றா அரங்கக் கலையில் 25 வருடங்களுக்கும் மேலான ஈடுபாட்டைக் கொண்டவராவார். இசை பாடல் நடிப்பு போன்றவற்றோடு தன்னை இணைத்து செயற்பட்டு வரும் அமனிற்றா லண்டன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தோடு இணைந்து பல சமூக கலை முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றார்
ஜானகி பாலசுப்பிரமணியன் 2023 முதல் மெய்வெளியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். தன் சிறு வயது முதல் ஊடகத் துறையில் ஆர்வம் காட்டி ஈடுபட்டுவரும் ஜானகி லண்டனில் இயங்கி வந்த முன்னணி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். லண்டனில் வசித்துவரும் இவர் மேடை நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் பல கலை இலக்கிய முயற்சிகளின் ஈடுபாட்டாளராகவும் செயலாற்றி வருகின்றார்.
சுமித் பிறேமஜயந்த் 2021 முதல் மெய்வெளியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இலங்கையின் வானொலித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் உள்ள சுமித் கலை மற்றும் ஊடகத் துறைகளில் ஆர்வமுடன் செயற்பட்டு வருபவராவார். இலங்கையில் வசித்து வரும் சுமித் பல வானொலி மற்றும் தொலைக்காட்சி வணிக விளம்பரங்களுக்கும் ஏனைய விபரணங்களுக்கும் குரல் வழங்கும் பணியை ஆற்றி வருவதுடன் கலை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
2024 முதல் மெய்வெளியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் சிவ பரிமேலழகர், 1970 ஆண்டில் இருந்து, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை வானொலிக் கலைஞராக பணியாற்றியதுடன் , 1980 களில் இருந்து இலண்டனில் இயங்கி வந்த ஸ்பெக்ரம் வானொலியல் நாடகக் கலைஞனாகவும் , ஏனைய சில முன்னணி வானொலிகளில் செய்திப்பிரிவில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர் ஆவார்.ஓய்வு பெற்ற கணக்காளரான இவர், இலண்டனில் வெளியாகிவந்த மாதாந்த இதழான புதினம் பத்திரிகையில் பத்தி எழுத்தாளராகவும், ஒரு மேடை நாடகக் கலைஞராகவும் திகழ்ந்திருக்கிறார். ஆன்மீகத் துறையில் அதிக ஈடுபாடுகொண்டுள்ள இவர் , வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பேசப்படுகின்ற நல்ல தமிழ் மொழி நடையினை பேணுவதன் மூலம் , நல்ல பேச்சுத் தமிழ் அழிந்து போகாமல் பாதுகாக்க முடியும் என நம்புகின்றவர்
Click here to watch Lilo’s News on screen